Home வணிகம்/தொழில் நுட்பம் பிளேக் பெர்ரியின் புதிய Z30 திறன்பேசி இன்று அறிமுகம்!

பிளேக் பெர்ரியின் புதிய Z30 திறன்பேசி இன்று அறிமுகம்!

677
0
SHARE
Ad

Z30-Blackberry---Feature18 செப்டம்பர் – இன்று பிளேக் பெர்ரியின் புதிய ரக Z30 என்ற திறன்பேசிகள், ஏற்கனவே பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

5 அங்குல திரையைக் கொண்டுள்ள இந்த திறன்பேசிகள் 10.2 இயங்குதளத்தை (10.2 OS) கொண்டு இயங்கும். இதுவரை பிளேக் பெர்ரி தயாரித்த திறன்பேசிகளில் இதுதான் அதிக ஆற்றலையும், அதிவேகத்தையும், அதிநவீன தொழில் நுட்ப அம்சங்களையும் கொண்டிருக்கின்றது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய மின்கலத்தையும் (battery) இந்த திறன்பேசிகள் கொண்டிருக்கும். Amoled எனப்படும் நவீன திரையையும், ஒலிகளை உள்வாங்கும் சிறந்த தொழில் நுட்பத்தையும், ஸ்டிரியோ எனப்படும் ஒலியமைப்பு முறையையும் இந்த திறன்பேசிகள் பெற்றிருக்கும்.

அடுத்த வாரம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நகர்களில் இந்த பிளேக் பெர்ரி திறன்பேசிகள் விற்பனைக்கு வரும். முதல்கட்டமாக பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு வரும்.

அந்தந்த நாடுகளில் விற்பனைக்கு வரும்போது, அந்த நாடுகளின் வர்த்தக சூழ்நிலைக்கு ஏற்ப இந்த திறன்பேசிகளில் விலைகளும் நிர்ணயிக்கப்படும்.