Home நாடு நெடுஞ்சாலைகளில் மீண்டும் ஏஇஎஸ்(AES) முறை! தனியாரிடமிருந்து அரசாங்கம் வாங்குகிறது!

நெடுஞ்சாலைகளில் மீண்டும் ஏஇஎஸ்(AES) முறை! தனியாரிடமிருந்து அரசாங்கம் வாங்குகிறது!

844
0
SHARE
Ad

PTJ01_160605_HISHAMUDDINகோலாலம்பூர், செப் 18 – நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் தானியங்கி அமலாக்க முறையை (Automated Enforcement System – AES) செயல்படுத்திய இரு நிறுவனங்களான ஏடிஇஎஸ் மற்றும் பேட்டா தெகாப்பிடமிருந்து இந்த முறையை அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது.

இது குறித்து இடைக்கால போக்குவரத்துறை அமைச்சரான ஹிசாமுடின் ஹுசைன் (படம்) கூறுகையில்,“ ஏடிஇஎஸ் மற்றும் பேட்டா தெகாப் நிறுவனங்களிடமிருந்து முறைப்படி இந்த திட்டத்தைப் பெறுவதற்குத் தேவையான வரவு செலவு கணக்குகளை வெளிப்படையான முறையில் கையாள நிதியமைச்சு ஒரு அரசு சாரா கணக்காய்வாளர் (ஆடிட்டர்) ஒருவரை நியமித்திருக்கிறது. காரணம் அவர்களுடைய சொத்துக்கள், முறைகள் மற்றும் நிலம் ஆகியவற்றை அரசாங்கம் பெறுகிறது. எனவே அதற்குப் பதிலாக அவர்களுக்கு அரசாங்கம் தகுந்த விலை கொடுக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

மேலும், “இதனால் யாருக்கும் எந்தவித லாபமும் கிடைக்கப்போவதில்லை” என்று இன்று புத்ரஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹிசாமுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த இரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய தானியங்கி அமலாக்க முறையை (Automated Enforcement System – AES) இனி அரசாங்கம் தனது சொந்த நிறுவனமான ஏஇஎஸ் சொல்யூஷன்ஸ் (AES Solutions Sdn Bhd) மூலம் செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை மூலம் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 150 ரிங்கிட்டிலிருந்து 300 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.