Home நாடு 435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து

435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து

967
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஏஇஎஸ் (AES – Automated Enforcement System) எனப்படும் தானியங்கி அமுலாக்க நடைமுறையின் கீழ் மறைக்காணி (கேமரா) மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு இதுவரையில் நிலுவையில் இருந்த 3.1 மில்லியன் குற்றப்பதிவுகள் (சம்மன்) இரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார். இந்தக் குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையின் மதிப்பு 435 மில்லியன் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் இந்த ஏஇஎஸ் திட்டம் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக போக்குவரத்து அமைச்சே எடுத்துக் கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்த முடிவைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

எனவே இனி இந்த மறைக்காணிகளை (கேமரா) கையாள்வது, புகைப்படம் எடுப்பது குற்றப் பதிவுகளை அனுப்புவது அனைத்தும் போக்குவரத்து அமைச்சால் நேரடியாக மேற்கொள்ளப்படும்.