Home Featured நாடு 2018 முதல் நெடுஞ்சாலைகளில் 100 ஏஇஎஸ் கேமராக்கள்!

2018 முதல் நெடுஞ்சாலைகளில் 100 ஏஇஎஸ் கேமராக்கள்!

791
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2018-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களைக் கண்காணிக்க 100 ஏஇஎஸ் கேமராக்கள் (Automated Enforcement System) பொருத்தப்படும் என துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்திருக்கிறார்.

வரும் 2020-ம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50 விழுக்காடு குறைக்கும் நோக்கில், அனைத்துலக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஏஇஎஸ் கேமராக்கள் வைக்கப்படும் என்றும் இன்று புதன்கிழமை பாரிட் ராஜாவில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அசிஸ் கப்ராவி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது நாடெங்கிலும் 50 கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.