Home Featured இந்தியா ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்!

ராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்!

1162
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்திய அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

முன்னதாக, 17 எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்திய அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.