Home Featured நாடு டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!

டிஓஜே வழக்கை முன்வைத்து பேரணி – எதிர்க்கட்சி முடிவு!

993
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்திருக்கும் வழக்கை முன்வைத்து வரும் செப்டம்பர் மாதம் எதிர்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

“மலேசியாவை நேசித்தல், திருட்டுக் கூட்டத்தை ஒழித்தல்” என்ற கருப்பொருளோடு இப்பேரணி நடைபெறவிருக்கிறது.

இப்பேரணி குறித்து நாடெங்கிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வரும் ஜூலை 6-ம் தேதி, பினாங்கு மாநிலம் கப்பளா பத்தாசில் முதல் பிரச்சாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.