பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு அட்டை இருந்தால் மட்டுமே வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தவோ அல்லது பெறவோ முடியும் என்ற நடைமுறை இருந்து வருகின்றது.
இந்நிலையில், இந்த பான் அட்டையைப் பெறுவதற்கும், வருமான வரித் தாக்கல் செய்வதற்கும் ஆதார் அட்டை எண் அவசியமாக வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மேலும், பான் அட்டையிலுள்ள எண்ணையும், ஆதார் அட்டையிலுள்ள எண்ணையும் ஒன்றிணைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Comments