சென்னை, ஆகஸ்ட் 19- ஆதார் எண் அவசியமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்தியத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாக்காளர்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், குடும்ப அட்டை விவரம் முதலியவற்றை ஒருங்கிணைத்து வருகிறோம்.இதன்மூலம் ஒரே வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயரைப் பதிவு செய்திருக்கிறாரா எனக் கண்டறிய முடியும்.கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க முடியும்.இதற்காகத்தான் ஆதார் எண் தேவை என்கிறோம்.
ஆனால், கடந்த 11-ஆம் தேதி, பொது விநியோகம்,மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைப் பெறுவதற்குத் தான் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். இவை தவிர்த்து மற்ற பயன்பாட்டிற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து இந்தியத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவுள்ளது எனக் கூறினார்.