Home Featured வணிகம் மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குனராக அஸ்மிர் ஜாஃபர் மீண்டும் நியமனம்! 

மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குனராக அஸ்மிர் ஜாஃபர் மீண்டும் நியமனம்! 

734
0
SHARE
Ad

Mcdonaldsmalaகோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஸ்மிர் ஜாஃபர் கடந்த 15-ம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னர் ஸ்டீபன் சூவ் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

நிர்வாக இயக்குனர் பதவியோ, மலேசிய கிளைகளை நிர்வகிக்கும் பொறுப்போ அஸ்மிர் ஜாஃபருக்கு புதிதல்ல. 1993-ம் ஆண்டு, மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் மேலாண்மை பிரிவு பயிலுனராக(Trainee) பணியில் சேர்ந்த அஸ்மிர், 2006-ம் ஆண்டு நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மெக்டொனால்ட்ஸ் மலேசியா, மிகச் சிறப்பாக இயங்கியது.

கடந்த 2009-ம் ஆண்டு, மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் தங்களது சீனக் கிளைகளுக்கு அஸ்மிரை துணைத் தலைவராக நியமனம் செய்தது. இப்படி ஆரம்பம் முதலே, மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் அஸ்மிர் பல்வேறு உயர் பதவிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தான், அஸ்மிர் மீண்டும் மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அஸ்மிர் ஜாஃபர் கூறுகையில், “மெக்டொனால்ட்ஸ் மலேசியாவிற்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதை கௌரவமாகக் கருதுகிறேன். இங்கு மீண்டும் வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும். வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதை எதிர்நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நூறு நாடுகளில் 36,000 உணவகங்களை அமைத்து வர்த்தகத்தை ஈட்டி வரும் மெக்டொனால்சிற்கு, மலேசியாவில் மட்டும் 260 கிளை உணவகங்கள் உள்ளன. அவற்றின் மூலம் மாதத்திற்கு, 13.5 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது.