Home கலை உலகம் புலி படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

புலி படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

647
0
SHARE
Ad

puli2சென்னை, ஆகஸ்ட் 20 – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ‘புலி’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க வரலாற்றுப் படமாக உருவாகி உள்ள புலி, ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை விஜய் படங்களில் பார்த்திராத பிரம்மாண்டக் காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என ‘புலி’ படக்குழுவினர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். முன்னோட்டத்தை பார்க்கையில் இப்படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்களும், முதல் முன்னோட்டமும் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த முழுமுன்னோட்டமும் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

புலி படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க: