Home Featured தொழில் நுட்பம் இனி ஐபோனில் வரைந்து தள்ளலாம் – வருகிறது ‘பேப்பர்’ செயலி! 

இனி ஐபோனில் வரைந்து தள்ளலாம் – வருகிறது ‘பேப்பர்’ செயலி! 

742
0
SHARE
Ad

 

paper-fiftythree-iphone-003கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ஃபிப்டித்ரீ’ (FiftyThree) நிறுவனத்தின், ‘பேப்பர்’ (Paper) செயலி வெகு விரைவில் ஐபோன்களிலும் மேம்படுத்தப்பட இருக்கிறது.

இந்த பேப்பர் செயலி, ஐபோனிற்கு  புதியதாக இருந்தாலும், ஆப்பிளின் ஐபேட் கருவிகளுக்கு புதியதல்ல. தொழில்நுட்ப கருவியான ஐபேட்டில் படங்களை வரையவும், வரையப்பட்ட படத்தின் தரத்தில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் இந்த பேப்பர் செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஐபோன்களில் இந்த செயலி வந்துவிடாதா? என பயனர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், மேற்கூடிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

paper-fiftythree-iphone-001கடந்த வருடம் ஐபோன் 6 தயாரிப்பில் இருந்த போதே இந்த செயலி மேம்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஃபிப்டித்ரீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், ஐபோன்களில் பேப்பர் செயலி மேம்படுத்தப்பட்டு இருப்பது போல் படங்கள் வெளியாகி உள்ளன.

எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.