Home இந்தியா உறுதியான அரசை தேர்வு செய்ய 2014 தேர்தல் வாய்ப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின...

உறுதியான அரசை தேர்வு செய்ய 2014 தேர்தல் வாய்ப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை

630
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 15- சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

president_pranab_mukherjee_ஜனநாயகம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமல்ல. நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு காந்தியடிகளின் கொள்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தினை மோதிக்கொள்ளும் களமாக உறுப்பினர்கள் மாற்றிவிட்டது வேதனை அளிக்கிறது. விவாதம் நடத்தி முடிவெடுப்பதற்காக நாடாளுமன்றங்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

நாடாளுன்றம் மற்றும் பேரவைகள் செயல்படும் முறை கவலை தருகிறது. நாட்டுக்கு பெரும் சவாலாக ஊழல் உருவெடுத்துவிட்டது. அலட்சியம் காரணமாக நாட்டின் செல்வங்கள் வீணடிக்கப்பட்டு வருகின்றன.

2014ல் நடைபெற உள்ள தேர்தல், ஸ்திரமான அரசை தேர்வு செய்வதற்கு மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகும்.

இந்தியா, அமைதி வழியில் உறுதி கொண்டுள்ளபோதிலும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது. பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினரின் வீரச்செயல்கள் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.