Home நாடு 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று கோலாலம்பூரில் துவங்குகிறது!

12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று கோலாலம்பூரில் துவங்குகிறது!

715
0
SHARE
Ad

Untitled-1

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியை மேம்படுத்தும் ஆராய்ச்சி மாநாடன தமிழ் இணைய மாநாடு, உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் தலைச்சிறந்த கணிப்பொறி அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போன்ற பல்வேறு ஆர்வலர்கள் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பாக துவங்குகிறது. இம்மாநாடு இரண்டாம் முறையாக மலேசியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டினை நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ அகமது ஷாபெரி சீக் தொடக்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் மலாயாப் பல்கலைக்கழக துணைவேந்தர் டான்ஸ்ரீ கவுத் பின் ஜேஸ்மான், தமிழகத்தின் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் கான்பூர்(இந்தியா) இந்தியத் தொழில் நுட்பத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

இம்மாநாட்டில் ஏழு நாடுகளிலிருந்து வருகை தரும் ஏறத்தாழ 650 பேராளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்து கொள்வதோடு நூறு ஆய்வுக்கட்டுரைகள் பன்னாட்டுப் பேராளர்களால் படைக்கப்படவுள்ளது.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்.

ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.

மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித் தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.