Home அரசியல் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல்: “என்னை யாரும் போட்டியிட வேண்டாம் என்று சொல்லவில்லை” – சுப்ரா...

ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தல்: “என்னை யாரும் போட்டியிட வேண்டாம் என்று சொல்லவில்லை” – சுப்ரா கோடி காட்டுகிறார்

600
0
SHARE
Ad

DR-SUBRAகோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேர்தலில், கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கோடி காட்டியுள்ளார்.

சித்த வைத்தியர் எம்.எஸ். செல்லையாவின் இந்திய மூலிகை மருத்துவம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுப்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் சென்ற இடமெல்லாம், சந்தித்த நபர்களெல்லாம் என்னை போட்டியிட வேண்டாம் என்று கூறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்த தனது நிலை பற்றி இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் துணைத்தலைவர் மற்றும் உதவித்தலைவர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி என்று முடிவுசெய்யப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா தேர்தலில், டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு போட்டியின்றி தேசியத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.