Home அரசியல் ம.இ.கா தேசிய தலைவர் தேர்தல் வேட்புமனு பாரங்கள் இன்று முதல் வெளியிடப்படும்- ம.இ.கா செயலாளர் அறிவிப்பு!

ம.இ.கா தேசிய தலைவர் தேர்தல் வேட்புமனு பாரங்கள் இன்று முதல் வெளியிடப்படும்- ம.இ.கா செயலாளர் அறிவிப்பு!

578
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக.15-  எதிர்வரும் ம.இ.கா தேர்தலை ஒட்டி தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு பாரங்கள் இன்று வியாழக்கிழமை முதல் ம.இ.கா தலைமையகத்தில் மற்றும் அந்தந்த மாநில அலுவலகங்களில் வெளியிடப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஏ. சக்திவேல் நேற்று அறிவித்தார்.

நேற்று கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ம.இ.கா கட்சி தலைமையகத்தில், ம.இ.கா தேசிய தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ம.இ.கா தேர்தல் குழுவின் முதலாவது தேர்தல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் சொன்னார்.

shakthi

#TamilSchoolmychoice

ம.இ.கா தேசிய தலைவருக்கான தேர்தல் வேட்புமனு

தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் முதல் தேதி காலை 10 மணி தொடங்கி  நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.

அவ்வகையில், போட்டியிருக்குமானால் தேர்தல் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறும்.

அதனை தொடர்ந்து, தேசிய தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும்.

கட்சியின் தேசிய துணைத் தலைவர், மூன்று உதவித்தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

எனினும் தேசியத் தலைவருக்கான  வேட்புமனுக்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று சக்திவேல் தெரிவித்தார்.

ம.இ.கா தேசிய தலைவர் தேர்தல் வேட்புமனு பாரங்கள் குறித்து டான்ஸ்ரீ குமரன் வெளியிட்ட அறிக்கை:-

Kumaran-Tan-Sri-Sliderம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட விரும்புகின்றவர்கள், முதலில் கிளைத்தலைவராக இருக்க வேண்டும்.

மேலும், வேட்பாளருக்கான 50 நியமனங்களை பெற வேண்டும். ஒவ்வொரு நியமன பாரத்திலும், ஒருவர் முன்மொழிந்து ஐவர்  வழிமொழிய வேண்டும்.

முன்மொழிபவர்கள் மற்றும் வழிமொழிபவர்கள் அனைவரும் கிளைத்தலைவர்கள் அல்லது மத்திய செயலவை உறுப்பினர்களாக இருத்தல் அவசியம் என குமரன் தெரிவித்தார்.