Home அரசியல் ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து கருத்துக் கூற மறுக்கும் சாமிவேலு!

ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து கருத்துக் கூற மறுக்கும் சாமிவேலு!

683
0
SHARE
Ad

Samy-Vellu-300x202கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 –  எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ம.இ.கா கட்சியின் தலைமைத்துவ தேர்தல் குறித்து அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு கருத்து கூற மறுக்கிறார்.

தன்னை ஒரு சாதாரண மனிதராகக் காட்டிக்கொள்ளும் அவர், இந்த விவகாரம் ம.இ.கா தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ம.இ.காவின் மூத்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்த சாமிவேலு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ம.இ.கா குறித்து எந்த ஒரு கருத்தையும் நான் கூறுவதற்கு இது சரியான நேரம் இல்லை. யார் வெற்றி பெறுவார்கள் என்ற முடிவை எதிர்நோக்கி மட்டுமே நான் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு, அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் போட்டியிடுவார் என்று பல்வேறு ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

அதோடு, கட்சியின் தேசிய துணைத்தலைவர், 3 உதவித்தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.