Home அரசியல் மத்திய செயற்குழுவுக்கு மறுதேர்தல் நடத்த ஜசெக ஒப்புதல்!

மத்திய செயற்குழுவுக்கு மறுதேர்தல் நடத்த ஜசெக ஒப்புதல்!

483
0
SHARE
Ad

DAPகோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – சங்கப்பதிவிலாகாவுடன் நடைபெற்ற நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஜசெக மத்திய செயற்குழுவுக்கு மறுதேர்தல் நடத்த அக்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

நேற்று இரவு கோலாலம்பூரில் ஜசெக பொதுச் செயலாளர் லீ குவான் எங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியா கினி செய்தி இணையதளம் கூறுகிறது.

இது குறித்து மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவரான கர்ப்பால் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மத்திய செயற் குழுவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற சங்கப்பதிவிலாகாவின் உத்தரவிற்கு, ஜசெக நிலை வலுவாக இருந்தாலும், கட்சியின் பதிவை ரத்து செய்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் மறுதேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சங்கப்பதிவிலாகாவிடமிருந்து தகுந்த காரணங்களைக் கேட்டறிய ஜசெக எவ்வளவோ முயற்சிகள் செய்தது என்றும், ஆனால் சங்கப்பதிவிலாகா சந்திப்பதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டதாகவும் கர்பால் சிங் கூறியுள்ளார்.