Home இந்தியா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும்: பீகார் பா.ஜனதா தீர்மானம்

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும்: பீகார் பா.ஜனதா தீர்மானம்

617
0
SHARE
Ad

கயா(பீகார்), ஆக. 17- பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

M_Id_380073_Narendra_Modiஅவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். மோடியை முன்னிலைப்படுத்தியதில் ஒருசில தலைவர்கள் அதிருப்தி அடைந்தாலும், கட்சியில் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில பா.ஜனதா கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவு நாளான இன்று முன்னாள் துணை முதல்வரான சுஷில் குமார் மோடி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

அதில், கட்சியின் பிரச்சாரக்குழு தலைவரான நரேந்திர மோடியை, காலம் தாழ்த்தாமல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நந்த கிஷோர் வழிமொழிய, ஒருமனதாக நிறைவேறியது.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முறைப்படி பீகார் பா.ஜனதாதான் முதன்முறையாக வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.