Home உலகம் டயானாவை கொன்றது இங்கிலாந்து ராணுவமா? ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசார் புதிய கோணத்தில் விசாரணை

டயானாவை கொன்றது இங்கிலாந்து ராணுவமா? ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசார் புதிய கோணத்தில் விசாரணை

482
0
SHARE
Ad

லண்டன், ஆக.19- இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் 31-8-1997 அன்று காதலர் டோடி ஃபயீத்துடன் பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் காரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

diana-2--aடயானாவை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பிரான்ஸ் அரசு நடத்திய விசாரணையின் முடிவில் கூறப்பட்டது போல் டயானாவின் கார் ஓட்டுநர்  அதிக போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்தில் சிக்கி டயானா உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து ராணுவத்தினர் கொன்று விட்டனர் என ரகசியமாக கூறி வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரகசியத்தை கூறிய ராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை ராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனை ‘போட்டுக் கொடுத்து’ பழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் மேற்படி புதிய தகவல் தொடர்பாக விசாரனை நடத்த ஸ்காட்லேண்ட் யார்ட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக ரகசியத்தை கசியவிட்ட ராணுவ வீரரின் முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டுள்ள போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.