Home கலை உலகம் சென்னையில் செப்டம்பர் 9-ந் தேதி நடிகர் பரத்துக்கு காதல் திருமணம்

சென்னையில் செப்டம்பர் 9-ந் தேதி நடிகர் பரத்துக்கு காதல் திருமணம்

790
0
SHARE
Ad

சென்னை, ஆக.19- சங்கர்  இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத்.

பாலாஜி சக்திவேல்  இயக்கிய  ‘காதல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார்.

654_Bharath-in-Vasanthabalans-Aravanசமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும். பரத்தும், துபாயில் பல் மருத்துவராக இருக்கும் ஜெஸ்லி என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

#TamilSchoolmychoice

இவர்கள் காதலை இரண்டு பேர்களின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பரத்-ஜெஸ்லி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 14-ந்தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் பரத் நிருபரிடம் கூறியதாவது:-

“ஜெஸ்லியை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தற்செயலாக சந்தித்தேன். 2 பேரும் நட்புடன் பழக ஆரம்பித்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. 2 பேரும் காதலை பகிர்ந்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.

எங்கள் திருமணத்திற்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் நானும், ஜெஸ்லியும் திருமணம் செய்து கொள்கிறோம். ஜெஸ்லி பி.டி.எஸ். படித்தவர்.

துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் எம்.டி.எஸ். படிக்க முடிவு செய்திருக்கிறார்.” இவ்வாறு பரத் கூறினார்.