Home கலை உலகம் நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்

853
0
SHARE
Ad

actress-shammu-stills-images-9ஜூலை 31- நடிகர் பரத்-ம், நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகர் பரத் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். எனவே, பரத்துடன் இரண்டு படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்த அமெரிக்கா வாழ் தமிழ் நடிகையான ஷம்முவைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை ஷம்மு பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த ‘காஞ்சிவரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

654_Bharath-in-Vasanthabalans-Aravanபரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார். இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம். இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில், பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, பரத்-ன் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, அண்ணி என்றுதான் அழைப்பார்களாம்.

ஆகையால், இருவீட்டாரும் கூடி, சீக்கிரமாகவே பரத்துக்கும், ஷம்முவுக்கு இடையிலான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண தேதியை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.