Home நாடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013

பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013

1068
0
SHARE
Ad

பினாங்கு, ஆக. 19- எதிர்வரும் 25.8.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை மணி 3.00க்கு இலக்கிய களம்  2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பினாங்கு டத்தோ கிராமாட்  சாலையில் அமைந்துள்ள இந்து சபா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

rajenthiranஇந்நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன் (படம்) சிறப்பு வருகை மேற்கொண்டு மலேசிய எழுத்தாளர்களின் இலக்கிய பயணங்கள் தொடர்பாக சிறப்புரை நிகழ்த்துவதுடன் பலவகையான இலக்கிய சுவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, கவிஞர் செ.சீனி நைனா முகம்மது ‘தமிழும் தமிழ் எழுத்தாளர்களும்’  எனும் தலைப்பில் இலக்கிய உரையும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் முனைவர் கார்த்திகேசு சிறுகதை கலந்துரையாடல் நடத்தி நிகழ்ச்சியை படைக்கவுள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

-தேநீர் விருந்துடன் தமிழ் வாழ்த்து

-வரவேற்புரை

-தலைமையுரை

-இலக்கிய உரை

-எழுத்தாளர்களை சிறப்புச் செய்தல்

-ஓவியம் பார்த்து கவிதை எழுதுவது

-கவிதை படைத்தல்

இவ்வாறு பல இலக்கிய அங்கங்கள் இடம் பெறவுள்ளன. இலக்கியம் படைத்து வெற்றிபெறும் படைப்பாளர்களுக்கு புத்தகம் மற்றும் பணமுடிப்பும்  அன்பளிப்பாக வழங்கப்படும்.

அனைவரும் இவ்விலக்கிய நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக் கொண்டு தங்களின் திறமைகளை வெளி கொணருமாறு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் செ.குணாளன்  படைப்பாளர்களை கேட்டுக் கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு, 013-4853128, 012-4881553,016-4050414, மற்றும் 019-5601080 ஆகிய எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.