Home நாடு மலேசிய எழுத்தாளர்களின் ஆண்டுச் சிறுகதை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும்! – வல்லினம் இலக்கிய அமைப்பு...

மலேசிய எழுத்தாளர்களின் ஆண்டுச் சிறுகதை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும்! – வல்லினம் இலக்கிய அமைப்பு அறிவிப்பு

954
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 19- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இனி ஆண்டு சிறுகதைத் தேர்வினை நடத்தாது என முடிவெடுத்துள்ளதை அதன் செயலாளர் ஆ. குணநாதன் அறிவித்துள்ளார்.

நாளிதழ்களில் வெளிவரும் கதைகளை நூலாக அச்சடித்து விற்க எழுத்தாளர்களிடம் பதிப்புரிமையைப் பெறுவதோடு விற்கப்பட்ட தொகையிலிருந்து உரிமைப்படி  வழங்கப்பட வேண்டும் என்ற எழுத்தாளர்களின் நியாயமான  கோரிக்கையின் மறுப்பாக இம்முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

vallinamஇந்த நிலையில் வல்லினம் இணைய இதழ் மற்றும் புத்தகச் சிறகுகள் நிறுவனம் இணைந்து இந்நிகழ்வினை தொடர்ந்து நடத்த முன்வந்துள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் ஜனவரி தொடங்கி உள்நாட்டில் வெளிவரும் நாளிதழ்  மற்றும் வார, மாத இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளும் இத்தேர்வில் சேர்த்துக் கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நூலாக்கப்படுவதோடு நூல் வெளியீட்டின் போது, சிறுகதை பட்டறையும் நடத்தப்படும்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் விற்பனையாகும் தொகையில் 20 விழுக்காடு உரிமைப்படியும் வழங்கப்படும்.

அச்சாகும் நூல்களின் எண்ணிக்கை, விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கை என அனைத்துமே வெளிப்படையாகவே முன்வைக்கப்படும்.

மலேசிய சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் இம்முயற்சிக்கு நாட்டில் இருக்கின்ற அனைத்து இலக்கிய இயக்கங்களும்  பங்கு பெறும் பட்சத்தில் தரமான முறையில்  இவ்விடயங்களைச் செய்து முடிக்க முடியும் என நம்புகிறோம்.

மேல் விவரங்களுக்கு, ம. நவீன் (வல்லினம்) 016-3194522 மற்றும் தயாஜி (புத்தகச் சிறகு) 016- 4743794 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.