Home உலகம் பிரதமர் மன்மோகன் சிங் செப்.27ம் தேதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார்

பிரதமர் மன்மோகன் சிங் செப்.27ம் தேதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார்

501
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 21- குறுகிய கால பயணமாக அடுத்த (செப்டம்பர்) மாதம் 27ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோருக்கிடையே வாஷிங்டனில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையின் போது இந்த சந்திப்பு தேதி இறுதி செய்யப்பட்டது.

Obama-Manmohan_287269fஅமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றுக் கொண்ட ஒபாமா, இந்தியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச முன்னதாக ஏற்பாடுகள் நடந்து வந்தன.

#TamilSchoolmychoice

அந்த திட்டத்தில் தற்போது மாறுதல் செய்யப்பட்டு இந்த சந்திப்பை வெள்ளை மாளிகையில் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா முதன்முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மன்மோகன் சிங் 2009ம் ஆண்டு அமெரிக்கா சென்று அவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், 2010ல் இந்தியா வந்த ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு வாஷிங்டன் செல்லும் மன்மோகன் சிங் ஒபாமாவை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையிலான பொது மற்றும் அணு கொள்கை கூட்டுறவு, பிராந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பான சவால்கள், ஆப்கானிஸ்தான் பிரச்சனை மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.