Home இந்தியா 9–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: சென்னையில் 600 சிலைகள் வைக்க ஏற்பாடு

9–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: சென்னையில் 600 சிலைகள் வைக்க ஏற்பாடு

1048
0
SHARE
Ad

சென்னை, ஆக. 21– விநாயகர் சதுர்த்தி விழா வருவதையொட்டி சென்னை கொசப் பேட்டையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது.

ganesha_766433fசுமார் 30–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 2 அடி முதல் 20 அடி வரை பல வடிவங்களில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. 40 விதமான விநாயகர் சிலைகள் தற்போது விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது.

விதவிதமான வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மனதை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

கொசப்பேட்டை மட்டு மின்றி பல்லாவரம், சேலையூர் உள்பட சென்னை புற நகர் பகுதிகளிலும் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மட்டுமின்றி ஆந்திரா, திருத்தணி பகுதிகளில் இருந்தும் சிலைகள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Delta_1_Regional_01_754681fநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா 9–ந்தேதி கொண்டாடப்படு வதையடுத்து முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் 600 சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு அமைப்பு சார்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வீதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.