Home நாடு அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இரு அதிகாரிகளும் விடுதலை!

அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இரு அதிகாரிகளும் விடுதலை!

660
0
SHARE
Ad

altanகோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

நீதிபதி முகமட் அபாண்டி அலி தலைமையிலான மூன்று அடங்கிய குழு இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நடத்தியது.

இருப்பினும், இவ்வழக்கு நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

#TamilSchoolmychoice

அசிலா மற்றும் சிருல் என்ற இரு காவல்துறை சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி 10 மணிக்கும் அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கும் இடையில் கிள்ளானில் உள்ள முக்கிம் புக்கிட் ராஜா என்ற இடத்தில் வைத்து இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன் பிறகு நடந்த விசாரணையில், அக்டோபர் 19 ஆம் தேதி அல்தான்துன்யா சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும், அவரது சடலம் காட்டுப்பகுதியில் வெடி வைத்து சிதைக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.