Home இந்தியா எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு தக்க பதிலடி கொடுங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு தக்க பதிலடி கொடுங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

598
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 23- எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு மவுனமாக இருக்காதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை கூறினார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது பற்றிய பயிற்சி முகாம், டெல்லியில் நடைபெற்றது. அதில், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

rahul-gandhi1கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது இல்லை. அதே சமயம், மவுனமாகவும் இருந்து விடாதீர்கள். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு நாம் கண்ணியமாகவும் பதிலடி கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது, சரக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்காக நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும்.

பொதுமக்களிடமோ அல்லது தொலைகாட்சி விவாதங்களிலோ, உங்களின் கருத்துகள் அனைத்தும் மாவட்ட காங்கிரஸ் முதல் அகில இந்திய காங்கிரஸ்வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அதாவது, ஒரே குரலில் பேச வேண்டும். அதற்காக, கட்சி தலைவர்கள் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். தகவல் தொடர்பு இடைவெளியே இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சியில் நான்கு, ஐந்து தலைவர்கள் மட்டும் முடிவு எடுப்பது இல்லை. கட்சியினரின் திறமையை மதிப்பிடும் பணி நடந்து வரும். சிறப்பாக செயல்பட்டு நல்ல பலன்களை பெற்றுத்தருபவர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்த முகாமில், மத்திய மந்திரிகள் மணீஷ் திவாரி, சசிதரூர், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரிவு தலைவர் அஜய் மக்கான், காங்கிரஸ் எம்.பி. திபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.