Home உலகம் பூமியை நோக்கி வரும் சூரியப்புயல்

பூமியை நோக்கி வரும் சூரியப்புயல்

657
0
SHARE
Ad

வாஷிங்டன், ஆக 23- சூரியனில் இருந்து வெளிப்பட்ட “சூரிய காந்தப் புயல்’ பூமியை நோக்கி வருகிறது.

“இதனால் பூமிக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்’ என, நாசா ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சூரியப்புயல் நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால் சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும். சூரிய காந்தப் புயல் மூன்று விதங்களில் நிகழும்.

#TamilSchoolmychoice

sun-heats-earth-on-one-hemisphere-onlyமுதலில், மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும் இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலை கதிர்வீச்சும் மூன்றாவதாக சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.

இதன்படி சூரியனில் கடந்த, 20ம் தேதி உருவான சூரிய காந்தப் புயல்  பூமியை நோக்கி வினாடிக்கு 570 மைல் வேகத்தில் வருகிறது.

இப்புயலால் விண்வெளியில் 100 கோடி டன்னுக்கும் அதிகமாக  துகள்கள் பரவியுள்ளன. இந்த புயல் பூமியை வந்தடைவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும்.

இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் உலக நாடுகள் விண்வெளியில்  அதிகளவிலான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி உள்ளன.

இச்செயற்கைக்கோள்கள் மூலம் தான் தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். சூரியப்புயலால், செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கி உள்ளது. இதனால் எவ்வித பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் 1989ம் ஆண்டு சூரியப்புயல் கனடாவை தாக்கியதால் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.