Home கலை உலகம் ஷாம்-ன் வித்தியாச நடிப்பில் உருவான ‘6’ செப்டம்பர் 13- ம் தேதி வெளியீடு

ஷாம்-ன் வித்தியாச நடிப்பில் உருவான ‘6’ செப்டம்பர் 13- ம் தேதி வெளியீடு

538
0
SHARE
Ad

2ngd8bnஆக. 23- நீண்ட நாட்களாகத் திரையில் காணப்படாத நடிகர் ஷாம், புது அவதாரம் எடுத்து திரையுலகில் மீண்டும் வலம் வர இருக்கிறார்.

வி.எஸ். துரையின் இயக்கத்தில் இவர் நடித்த ‘6’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 13-ம்தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, மதி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணி புரிந்துள்ளார். அந்தோணி இந்தப் படத்திற்கான  காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனமும், அபி நிறுவனமும் இணைந்து இந்தத் திரைப்படத்தின் வினியோக உரிமைகளைப் பெற்றுள்ளன.

தயாரிப்புத்துறை, இந்தத் திரைப்படத்தைப் பற்றியும் ஷாமின் அற்புதமான நடிப்பு பற்றியும் மிகவும் பாராட்டியுள்ளதாகவும், இத்திரைப்படம் இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், இந்தத் திரைப்படம் சினிமாத்துறையினரிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.