Home கலை உலகம் மெட்ராஸ் கபே படத்துக்கு சத்யராஜ் கண்டனம்

மெட்ராஸ் கபே படத்துக்கு சத்யராஜ் கண்டனம்

673
0
SHARE
Ad

ஆக. 23- சென்னை சத்யம்  திரையரங்கில் இன்று நடந்த ராஜா ராணி பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:–

sathyaraj1மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக போராட்டங்கள் நடக்கின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அவர்களை இழிவுபடுத்தி படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளது என்கின்றனர். இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
ராஜா ராணி படத்தின்  இயக்குனர் அட்லியை நண்பன் படப்பிடிப்பிலேயே எனக்கு தெரியும். இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

#TamilSchoolmychoice

விழாவில் படத்தின் கதாநாயகன் ஆர்யா மற்றும் நடிகர் ஜீவா, இயக்குனரகள்  ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்றனர்.