சத்யராஜுக்கு எதிராகக் கர்நாடகாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள், சத்யராஜின் மன்னிப்பை ஏற்று ‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு எதிராகப் போராடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மீதோ அல்லது இயக்குநர் ராஜமௌலி மீதோ தங்களுக்கு எந்த ஒரு பகையும் இல்லை என்று கூறிய வாட்டாள் நாகராஜ், சத்யராஜ் பேசிய பேச்சிற்காகவே இப்படி ஒரு போராட்டத்தைத் தாங்கள் ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
மேலும், சத்யராஜ் மன்னிப்புக் கேட்டுவிட்டதால், வரும் ஏப்ரல் 28-ம் தேதி ‘பாகுபலி 2’ வெளியீடு அன்று கர்நாடகாவில் நடக்கவிருந்த கடையடைப்புப் போராட்டத்தைத் தாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருக்கிறார்.