Home நாடு “அரசாங்கத்தில் இருப்பதால் என்னால் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியாது” – வேதமூர்த்தி பதிலடி

“அரசாங்கத்தில் இருப்பதால் என்னால் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியாது” – வேதமூர்த்தி பதிலடி

481
0
SHARE
Ad

waytha1-300x209

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தின் தலைவராக இருக்கும் நான் அரசாங்கத்தில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக வெறும் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடியாது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வகுத்த பாதையில் வேதமூர்த்தி செல்ல வேண்டும் என்று கூறிய உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியின் கருத்துக்கு பதிலளிக்கு விதமாக துணையமைச்சரான வேதமூர்த்தி இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து வேதமூர்த்தி மேலும் கூறுகையில், “ அடித்தட்டு மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து அதை அரசாங்கத்திற்கு சாதகமான வகையில் எடுத்துரைத்து எனது பங்களிப்பை செய்கிறேன். இதனால் அரசாங்கம் நன்மையடைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பினாங்கு மாநிலத்தில் 5 இந்தியர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதில் தான் கூறிய கருத்தை சாஹிட் தவறாகப் புரிந்து கொண்டார் என்றும், இது போன்று சந்தேகப்படுவர்களை சுட்டுக்கொல்வதால் நாட்டின் பெருகியுள்ள குற்றச்செயல்கள் குறைந்து விடாது என்றும் வேதமூர்த்தி கூறியுள்ளார்.

5 இந்தியர்கள் சுடப்பட்ட வழக்கில் கருத்து கூறிய வேதமூர்த்தியை, அரசு சார்பற்ற இயக்கங்கள் போல் வேதமூர்த்தி செயல்படக்கூடாது என்றும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக அறிக்கைகள் விடக்கூடாது என்றும் சாஹிட் ஹமீடி சாடியது குறிப்பிடத்தக்கது.