Home வாழ் நலம் சத்துப்பட்டியல் : மங்குஸ்தீன் பழம்

சத்துப்பட்டியல் : மங்குஸ்தீன் பழம்

1263
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 27- மங்குஸ்தீன்  பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த ஊதா வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும்.

உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்பமண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி.

tumblr_ltq1ezZkrL1qdg79ro1_50020 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தீன் மரம். ‘குளுசியாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக மங்குஸ்தீன் மரங்கள் வளரும்.

#TamilSchoolmychoice

இந்தோனேசியா,  பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் நம் நாடுகளில் மிகுதியாக இப்பழம் விளைகிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தீன்  பழங்களின் விளைச்சல் காலக்கட்டமாகும். இக்காலக்கட்டத்தில், ஆங்காங்கே, பழக்கடைகளில் இப்பழங்கள் விற்பனை செய்வதை காணலாம். மங்குஸ்தீன் பழங்களில்  பல வகைகள் உள்ளன.

மங்குஸ்தீன் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தீன் பழத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5934784147_76e37a8533_zஎளிதில் செரிமானம் ஆகும்  நார்ச்சத்துக்களை ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தீன் பழங்களை சாப்பிடலாம்.

‘வைட்டமின் சி’ நிறைந்தது மங்குஸ்தீன். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் ‘வைட்டமின் சி’ உள்ளது. நீரில் கரையத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் ‘வைட்டமின் சி’.

Mangosteen (2)அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தீன் பழத்தில் காணப்படுகிறது. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.

அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது.

உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
mangosteen juice_cocktail
சாப்பிடும் முறை : –

மேற்தோலை நீக்கிவிட்டு மங்குஸ்தீன் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் தணிக்கவும் ஏற்றது மங்குஸ்தீன் சாறு!

தேங்காய்ப்பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தீன் பழத் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் ‘மங்குஸ்தீன் கிளாபோட்டி’ சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.