“அன்வாருக்கு இதுவெல்லாம் வெறும் அரசியல்தான். அன்வாருக்கு எதைப்பற்றி வேண்டுமானாலும் கலந்துரையாடல் நடத்த ஆர்வமிருந்தால் அவர் அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரலாம். பொதுத் தேர்தல் முடிவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இப்போது மட்டும் எதற்கு கலந்துரையாடல்?” என அவர் வினவினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதும் உண்மையாக நடந்து கொள்வதில்லை என்றும் தங்களின் வார்த்தைகளில் சத்தியத்தை எப்போதும் கடைப்பிடிப்பதில்லை என்றும் அட்னான் மேலும் கூறினார்.
புத்ரா ஜெயா ஏரியில் உல்லாசப் படகு சுற்றுலா தொடங்கி பத்து வருட நிறைவு விழாவை தொடக்கி வைத்தபோது பத்திரிக்கையாளர்களிடம் அட்னான் பேசினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுப் பிரச்சனைகள் பற்றி தேசிய முன்னணியுடன் பேச்சு வார்த்தை நடத்த பக்காத்தான் ராயாட் தயார் என அன்வார் நேற்று அறிவித்திருந்தது தொடர்பில் கருத்துரைத்த போதே அட்னான் மேற்கண்டவாறு கூறினார்.
.