Home கலை உலகம் பிரபுதேவாவுக்கு மெழுகுசிலை: இந்தி ரசிகர்கள் உருவாக்குகிறார்கள்

பிரபுதேவாவுக்கு மெழுகுசிலை: இந்தி ரசிகர்கள் உருவாக்குகிறார்கள்

551
0
SHARE
Ad

பிரபுதேவாவுக்கு இந்தி ரசிகர்கள் மெழுகுசிலை உருவாக்குகிறார்கள். இவர் அங்கு முன்னணி இயக்குனராகியுள்ளார்.

prabhu-deva-rocking-dance-performance-umang-police-show-2013இந்தியில் இவர் இயக்கம்  செய்த ‘ரவுடி ரத்தோர்’, ‘ராமையா வஸ்தாவையா’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ் கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை இயக்கம் செய்கிறார்.

‘ராம்போ ராஜ்குமார்’ என்ற இந்தி படமும் கைவசம் உள்ளது. இவரே தனது படங்களுக்கு நடன இயக்குனராகவும், படங்களை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

M_Id_373648_Prabhu_Devaபிரபுதேவா நடனத்துக்கு இந்திபட உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் இந்த மெழுகு சிலையை உருவாக்குகிறார்கள்.

லண்டன் அரும் பொருட்காட்சிசாலையில் அமிதாப்பச்சன், சச்சின், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கு மெழுகு சிலைகள் உள்ளன. அந்த சிலைகளுக்கு இணையாக பிரபுதேவா சிலை தயாராகிறது.