Home Video ‘மெர்க்குரி’ – கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா மிரட்டும் முன்னோட்டம்

‘மெர்க்குரி’ – கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா மிரட்டும் முன்னோட்டம்

1418
0
SHARE
Ad

சென்னை – திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாத சூழல் தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்ப்படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்படுவதோடு, பட முன்னோட்டங்களும் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்து வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் ‘மெர்க்குரி’. இளம் இயக்குநர்களில் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளிவரும் படம் இது.

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பும் கார்த்திக் சுப்புராஜூக்கு அமைந்திருக்கிறது என்பது மற்றொரு கொசுறுத் தகவல்.

#TamilSchoolmychoice

ஒரு பேய்ப் படத்தின் சாயலில் அமைந்திருக்கின்றது ‘மெர்க்குரி’ படத்தின் குறு முன்னோட்டம் (teaser). மொழியே இல்லாத படம் என்றும் இந்தப் படத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. வசனங்கள் இல்லாமல் பல மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி – அதாவது சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் 25 இலட்சம் பார்வையாளர்களை யூ டியூப் இணையத் தளத்தில் ஈர்த்துள்ளது.

அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: