Home நாடு அவசரகாலச் சட்டம் அகற்றம்: குற்றங்களைத் தடுக்கும் ஆயுதம் இன்றி காவல்துறை தவிக்கிறது – வான் ஜுனாய்டி...

அவசரகாலச் சட்டம் அகற்றம்: குற்றங்களைத் தடுக்கும் ஆயுதம் இன்றி காவல்துறை தவிக்கிறது – வான் ஜுனாய்டி கருத்து

511
0
SHARE
Ad

Datuk-Dr-Wan-Junaidi-Tuanku-Jaafarகோலாலம்பூர், செப்டம்பர் 2 – நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் அவசரகால சட்டம் அகற்றப்பட்டது தான் என்று காவல்துறை தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடுமையான சட்டங்கள் இன்றி காவல்துறை பல் இல்லாத புலியாக இருப்பதாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார்(படம்) இன்று சினார் ஹரியான் நாளிதழ் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

#TamilSchoolmychoice

“அவசரகாலச் சட்டம் இல்லாமல் காவல்துறை முன்பு போல் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. இப்போது உள்ள சட்டங்களை வைத்து சிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால் பெரிய குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பெரிய குற்றங்களை செய்பவர்களுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டுவது மிகக் கடினமாக உள்ளது என்றும், சாட்சியம் அளிக்க யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.