Home நாடு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 20 காசு உயர்ந்தது!

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 20 காசு உயர்ந்தது!

593
0
SHARE
Ad

petrol_2176352bகோலாலம்பூர், செப்டம்பர் 2 – ரோன் 95 என்ற வகை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவில் இருந்து லிட்டருக்கு 20 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் படி தற்போது 1 லிட்டர் 1 ரிங்கிட் 90 காசுக்கு விற்கப்படும் ரோன் 95 வகை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளை முதல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 காசாக உயருகிறது.

தோராயமாக 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட புரோட்டான் சாகா வகை காரை நாளை முதல் முழு கொள்கலனையும் (Full tank) நிறப்ப வேண்டும் என்றால் 8 ரிங்கிட் அதிக விலை கொடுக்கவேண்டும்.

#TamilSchoolmychoice

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று மாலை புத்ரஜெயாவில் செய்தியாளர் சிறப்பு  கூட்டம் ஒன்றை நடத்தி அறிவித்தார்.