Home நாடு சாங் சாகா மலாயா கொடி விவகாரம்! தேசிய இலக்கியவாதி சமட் தலைமறைவு! – காலிட் தகவல்

சாங் சாகா மலாயா கொடி விவகாரம்! தேசிய இலக்கியவாதி சமட் தலைமறைவு! – காலிட் தகவல்

539
0
SHARE
Ad

Samad-Said-Sliderகோலாலம்பூர், செப்டம்பர் 3 – கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு விசாரணைக்காக சமட்டின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவர் அங்கில்லாத்தால் திரும்பிவிட்டனர்.

காவல்துறை வருவதை அறிந்து அவர் பதுங்கிக் கொண்டதாக தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் அறிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் ஹிஷாமுடின் ரைஸ், ஆடம் அட்லி ஆகியோரை நேற்று இரவு 8.40 மணியளவில் காவல்துறை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த இருவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் விசாரனை முடிந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.