கோலாலம்பூர், செப்டம்பர் 3 – இம்மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் குற்றத் தடுப்பு சட்டம் 1959 திருத்தப்பட்டு, குற்றங்களுக்கு எதிராக காவல்துறை விரைந்து செயல்படும் வகையில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.
“தீபகற்ப மலேசியாவில் பயன்பாட்டில் இருக்கும் அந்த சட்டம் சபா, சரவாக்கிற்கும் விரிவுபடுத்தப்படும்” என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தேகப்படும் நபர்களை காவல்துறை கைது செய்து 72 நாட்கள் தடுத்தும் வைக்கும் அதிகாரம் விரிவுபடுத்தப்பட மாட்டாது என்று சாஹிட் குறிப்பிட்டார்.
இந்த சட்டதிருத்தத்தின் நோக்கம், குற்றங்களுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கையை துரிதப்படுத்து ஆகும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த குற்ற தடுப்பு சட்டத்தில் செய்யப்படும் திருத்தத்தை தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்வாரகள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.