Home நாடு பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி! தடுக்க முயன்ற கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி! தடுக்க முயன்ற கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

512
0
SHARE
Ad

81378187608_freesizeகோலாலம்பூர், செப்டம்பர் 3 – இன்று காலை லெபோ அம்பாங்கில் உள்ள பிரபல நகைக்கடையில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற போது, அங்கிருந்த இருந்த கடை உரிமையாளர் தடுக்க முயன்றதால் ஆத்திரத்தில் அவரின் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

இது குறித்து டாங் வாங்கி காவல்துறைத் துணை ஆணையர் ஜைனுதீன் அகமட் கூறுகையில், இச்சம்பவத்தில் கடை உரிமையாளரானஅப்துல் ராசுல் ரசாக்கின் (வயது 58) தோள்பட்டை, வயிறு ஆகிய பகுதிகளில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

“இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு நபர்கள் முகக்கவசம் அணிந்து கடையினுள் புகுந்துள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பணியாளர்கள் நகைகளை பார்வைக்காக வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த கடை உரிமையாளர் கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் ஏற்கனவே வெளியில் பதுங்கி இருந்த மற்ற இரு கொள்ளையர்களின் ஒருவன் அவரின் மீது  துப்பாக்கியால் சுட்டுள்ளான்” என்று ஜைனுதீன் கூறினார்.

#TamilSchoolmychoice

வெளியே நின்றிருந்த இரு கொள்ளையர்களில் ஒருவனிடம் தான் துப்பாக்கி இருந்ததாக நம்பப்படுகிறது. காவல்துறை இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.