Home கலை உலகம் ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்

ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்

1356
0
SHARE
Ad

செப். 4- மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் நஸ்ரியா நசீம்.

‘நேரம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார்.

இப்போது, மலையாளத்திலும், தமிழிலும் குறிப்பிடத்தக்க அளவு படங்களை அதுவும் முன்னணி நடிகர்களுடன் இவர் கைவசம் வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

nazriya-nazim-cute-stills-21நேரம் திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் குறித்து கேட்டபோது, அதிகப் படங்களில் வாய்ப்புக் கிடைத்திருப்பதைத் தவிர தனக்குப் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று நஸ்ரியா தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த தன்னை கதாநாயகியாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள், இதனால் தனக்குப் பொறுப்புகள் கூடியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறினார்.

தனக்குக் கிடைத்த பாராட்டுகள் மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்ட நஸ்ரியா இந்தப் பாராட்டுகள் மக்கள் தன்னை கதாநாயகியாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகின்றது.

ஒரே படத்தின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு வந்திருப்பது தன்னால் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அச்சத்தையும் தருகின்றது.

ஆயினும் தன்னால் இயன்றவரை சிறப்பாக செய்வேன் என்றும் நஸ்ரியா தெரிவித்தார்.