Home வாழ் நலம் கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு

கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு

1323
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப் 4- கேழ்வரகு  ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும்.

இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.

கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும்.

மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம்.

Ragi-Plant-Kabiniபண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.

ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்.

பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.

இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன.

இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

ragi (Custom)இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன்  ஒவ்வாமை உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ் வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.

அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.

இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

எடை இழக்க:-

கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது.

இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :-

கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த :-

கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.

இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :-

கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ரத்த சோகையைக் குணப்படுத்த :

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

10MP_RAGI_1202852fசோர்வைப் போக்க :-

கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :-

உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

பிற ஆரோக்கிய நிலைமைகள் :-

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

img_3638உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :-

கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது.

ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான்.

அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.

அதனால் ஏற்படும் மாற்றம்:-

எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.