Home வணிகம்/தொழில் நுட்பம் பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்!

பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்!

556
0
SHARE
Ad

invite-130903செப்டம்பர் 4 – பிரபல திறன் பேசி (Smart Phone) தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய புதிய கருவியை அறிமுகப்படுத்த ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஆனால் அந்த அழைப்பில் ஐபோன்களைப் பற்றி அதிகம் குறிப்பிடாமல், “உங்களுடைய நாள் வண்ணமயமாக இருக்கும்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10ஆம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கருவி, புதிய ரக ஐபோன் 5 எஸ் என நம்பப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக விழா அழைப்பிதழின் படி, இனி புதிதாக வரக்கூடிய ஐபோன்கள் அனைத்தும் பல வண்ணங்களில் கிடைக்கப்போகிறது என்பது பொதுமக்களுக்கான நற்செய்தியாகும்.

#TamilSchoolmychoice

கசிந்த தகவல்களின் அடிப்படையில்  பார்த்தால், ஐபோன் 5எஸ்  “ஷாம்பெயின்” ஷேடு நிறத்திலும், குறைந்த விலை தயாரிப்பான ஐபோன் 5சி வெள்ளை, பச்சை, சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் இளம் நீலம் ஆகிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே விரைவில் ஐபோன் பல வண்ணங்களில் உங்கள் கைகளில் தவழவுள்ளது.

ஐபோன் 5 எஸ் 

ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் பதியும் வேகம் கொண்டதாக இருக்கும். தற்போதைய ஐபோன் கேமராக்கள், விநாடிக்கு 30 பிரேம் பதியும் திறன் கொண்டுள்ளன. இதனால், புதிய போனை கொண்டு ஸ்லோ மோஷன் திரைப்படங்களைக் கூடப் பதியலாம்.

ஐபோன் 5 சி

ஐபோன் 5 சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையைக் குறைக்க முடிகிறது. தற்போது விலை குறைந்த மற்றும் மத்திய நிலையில் விலையிட்டுள்ள திறன் பேசிகளே சந்தையில் கோலோச்சி வருகின்றன. இதனால், குறைவான விலையில் திறன் பேசி ஒன்றை கொண்டு வருவதில் ஆப்பிள் குறியாய் உள்ளது. இந்த விலை குறைவான மாடல் மூலம் சந்தையில் தன்னுடைய திறன் பேசியை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.