Home உலகம் சிரியா மீது தாக்குதல்: ஒபாமாவின் முடிவுக்கு 59 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு

சிரியா மீது தாக்குதல்: ஒபாமாவின் முடிவுக்கு 59 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு

619
0
SHARE
Ad

வாஷிங்டன், செப். 4- ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்த முடிவுக்கு பாராளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

obama-angry-3இந்நிலையில், ஒபாமாவின் தாக்குதல் முடிவுக்கு 59 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்காவின் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி மற்றும் எக்கட்சியையும் சாராத பொதுமக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இதில் 54 சதவீதம் ஜனநாயக கட்சியினரும், 55 சதவீதம் குடியரசு கட்சியினரும், எக்கட்சியையும் சாராத 66 சதவீதம் பொதுமக்களும் சிரியா மீது தாக்குதல் நடத்தும் ஒபாமாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் மீண்டும் ஓர் போரில் அமெரிக்கா ஈடுபடுவதை விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

சிரியாவில் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து போரிட்டு வரும் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத வழங்குவதற்கு 70 சதவீதம் அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வெறும் 27 சதவீதம் பேர் மட்டும் இதை ஆதரிக்கின்றனர்.

கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி, இம்மாதம் 1ம் தேதி வரை ஆயிரத்து 12 அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சிரியா மீது போர் தொடுக்கும் ஒபாமாவின் முடிவுக்கு 59 சதவீதம் பேர் எதிர்ப்பும், 36 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.