Home இந்தியா ‘ஜி – 20’ மாநாட்டில் கலந்து கொள்ள மன்மோகன் ரஷ்யா பயணம்! இந்திய ரூபாய் மதிப்பை...

‘ஜி – 20’ மாநாட்டில் கலந்து கொள்ள மன்மோகன் ரஷ்யா பயணம்! இந்திய ரூபாய் மதிப்பை நிலை நிறுத்துவதாக உறுதி!

644
0
SHARE
Ad

manmohan-singhமும்பை, செப்டம்பர் 4 – இந்தியாவின் முதலீடுகள் வெளியேறுவதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

‘ஜி- 20’ மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக ரஷ்யா சென்றுள்ள மன்மோகன், அங்கு “பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்களுடன் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விவாதிப்பார்.

‘ஜி 20’ மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள “பிரிக்ஸ்’ நாடுகள் அமைப்பில், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் சந்தித்து கலந்தாலோசிப்பார்கள்.

#TamilSchoolmychoice

அந்த சந்திப்பில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மன்மோகன் விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள இந்த ‘ஜி -20’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லும் மன்மோகன் சிங், புறப்படுவதற்கு முன் இன்று டில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதலீடுகள் வெளியேறுவதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சர்வதேச நிதிக்கொள்கையில் வழக்கில் இல்லாத நடைமுறைகளை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும். இது போன்ற நிதிக் கொள்கைகளால், வளரும் நாடுகளின் வளர்ச்சி தடுக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துகொண்டே செல்கிறது.

கடந்த புதன்கிழமை ஏற்பட்டது போன்ற இன்றைய வர்த்தக துவக்கத்தில் ரூபாய் மதிப்பு 88 காசுகள் சரிந்துவிட்டது. ரூபாய் மதிப்பு 68.60 என்ற நிலைக்கு சரிந்தது.அதே நேரத்தில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுவதால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 170 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 18,407.86 புள்ளிகளாகவும், நிப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 5394 புள்ளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.