Home நாடு பாக் சமட்டிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? – அம்பிகா ஆவேசம்

பாக் சமட்டிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? – அம்பிகா ஆவேசம்

555
0
SHARE
Ad

S Ambigaகோலாலம்பூர், செப்டம்பர் 4 –  பெர்சே அமைப்பின் இணைத் தலைவரும், தேசிய இலக்கியவாதியுமான பாக் சமட்டை காவல்துறை இன்று அதிகாலை கைது செய்து விசாரணைக்குப் பின்னர் விடுவித்தது குறித்து பெர்சே அமைப்பின் மற்றொரு தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மரியாதைக்குரிய அந்த மனிதரை எப்படி காவல்துறை இவ்வாறு நடத்தலாம்? அதிகாலை 12.30 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று கைது செய்து விசாரணைக்குப் பின் 2.30 மணியளவில் விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏன்?” என்று அம்பிகா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த ஒரு சிறிய விஷயத்திற்காக அந்த மனிதரை இப்படி நடத்துவது காவல்துறையின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது” என்று அம்பிகா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, 81 வயதான இலக்கியவாதி ஓடி ஒளிந்து கொண்டார் என்று தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் விடுத்த அறிக்கைக்கு, முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஒருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாக் சமட் என்று அழைக்கப்படும் அந்த மரியாதைக்குரிய இலக்கியவாதியை, விசாரணை என்ற பெயரில் முறையற்ற வகையில் நடத்தி காவல்துறை மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்றும், அவர் மலேசிய மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு மனிதர் என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட்டை இன்று அதிகாலை காவல்துறை கைது செய்து, 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் விடுவித்தது.