Home இந்தியா ஆசிரியர் சமுதாயம் வளர்ந்தால் தமிழ் சமுதாயம் எழுச்சி பெறும்: கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் சமுதாயம் வளர்ந்தால் தமிழ் சமுதாயம் எழுச்சி பெறும்: கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து

1234
0
SHARE
Ad

சென்னை, செப். 4– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

karunaathi-smileஇந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர்த்திங்கள் 5ஆம் நாள், ஆண்டு தோறும், ஆசிரியர் தினம் என நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆசிரியர் தின நாளில் தமிழக ஆசிரியர் சமுதாய அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உள மார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

#TamilSchoolmychoice

பேரறிஞர் அண்ணாவை தொடர்ந்து நான் தமிழகத் தில் ஆட்சிப் பொறுப் பேற்ற வேளைகளில் உள்ளாட்சி நிறுவனப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை , 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம்; பணியில் இருக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்போது 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

TD 084தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்க வகை செய்து 1.12.1974 முதல் நடை முறைப்படுத்திய ‘தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம்’, ஆசிரியர், அரசு ஊழியர் இறந்தால் அவர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படை நியமனம் வழங்கும் திட்டம்; பதிவு முன்னுரிமை அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் உட்பட ஆசிரியர் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.

z 337தமிழக ஆசிரியர் சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்க வேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்ச்சமுதாயம் என்றும் அறிவார்ந்த சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு இந்த ஆண்டின் ஆசிரியர் தின நல்வாடிநத்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.