Home கலை உலகம் சுற்றும் கதாநாயகர்கள்: காதலில் சிக்காத நயன்தாரா?

சுற்றும் கதாநாயகர்கள்: காதலில் சிக்காத நயன்தாரா?

620
0
SHARE
Ad

Simbu-and-Nayanthara-are-Friends-Again-3செப். 4- நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர்.

ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள். திடீரென அது முறிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை அள்ளி வீசி விட்டு பிரிந்தார்கள்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு நயன்தாராவும், சிம்புவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் படங்கள்  இணையத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

prabhudevanayantharaகாதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார். அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர்.

மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார். ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவருமே இதுவரை சொல்லவில்லை.

இதனால் விரக்தியின் உச்சிக்கு போன நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பெரும் தொகை சம்பளம் கொடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

AryaNayantharaதற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார் என்றும் கூறப்பட்டது.

இது போல் இன்னாரு இரண்டெழுத்து  கதாநாயகனும் அவரை விரும்புகிறாராம். அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை. எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்.