Home நாடு கோயில் இடிப்பு விவகாரம்:தெங்கு அட்னான் கூறுவது பொய்யான தகவல் – ம.இ.கா இளைஞர் பிரிவு

கோயில் இடிப்பு விவகாரம்:தெங்கு அட்னான் கூறுவது பொய்யான தகவல் – ம.இ.கா இளைஞர் பிரிவு

660
0
SHARE
Ad

hqdefaultகோலாலம்பூர், செப்டம்பர் 5 – ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் ஒரு பகுதியை கோலாலம்பூர் மாநகராட்சி சபை  (டிபிகேஎல்) இடிக்கவில்லை என்றும், அதிலுள்ள ஒரு கடையைத் தான் உடைத்தது என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறிவருவது பொய்யான தகவல் என்று மஇகா இளைஞர் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

“ஒரு சிறுவனுக்குக் கூட தெரியும் இடிக்கப்பட்டது கோயிலா அல்லது கடையா என்பது” என்று மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் சி.சிவராஜா கூறியுள்ளார்.

மேலும், அமைச்சரவையில் சிறப்பு அதிகாரி ரமணனையும் சிவராஜா சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்துக்களின் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தெங்கு அட்னான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.